கரோனா தடுப்பூசிக்கான நிபுணர் குழு கூட்டம்
இந்தியாவில் மூன்று கரோனா தடுப்பூசிகள் வெவ்வேறு கட்ட ஆய்வில் உள்ள நிலையில், கரோனா தடுப்பூசிக்கான நிபுணர் குழு கூட்டம் இன்று கூடுகிறது.
அமைச்சர்கள் பதவியேற்பு!
இலங்கை 9ஆவது நாடாளுமன்றத்தின் புதிய அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பிரதமர் மஹிந்தா ராஜபக்சே முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர்.
மஹிந்தா ராஜபக்சே மற்றும்கோத்தபய ராஜபக்சே
மாணவர்களுக்கு இலவச செல்போன்
ஆன்லைன் வகுப்புகளுக்காக பள்ளி மாணவர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு இன்று முதல் இலவசமாக செல்போன் வழங்குகிறது. இதனை அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தொடங்கி வைக்கிறார்.
மாணவர்களுக்கு இலவச செல்போன் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.
வேதா இல்ல வழக்கு இன்று விசாரணை
வேதா இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்து, வீட்டை கையகப்படுத்தத் தடைவிதிக்க வேண்டும், வேதா இல்லத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.