தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு!#EtvBharatNewsToday - புத்தகக் கண்காட்சி

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

Etv Bharat News Today
Etv Bharat News Today

By

Published : Sep 11, 2020, 6:01 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் வருகை:

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகிறார். மேலும், பல்வேறு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் வருகை

சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள கரோனா சோதனை:

சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இன்று முதல் அந்தந்த மாவட்டங்களில் கரோனா தொற்று சோதனை நடைபெறவுள்ளது.

சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள கரோனா சோதனை

புத்தகக் கண்காட்சி:

அருப்புக்கோட்டையில் இன்று முதல் செப்டம்பர் 20ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. வாடிக்கையாளர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகம் வாங்க வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சி

மொகரம் பண்டிகை:

இன்று இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு மொகரம் பண்டிகைக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

மொகரம் பண்டிகை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே:

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்து, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே

9/11 பயங்கரவாத தாக்குதல்:

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் உள்பட 4 இடங்களில் அல் கைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம் இன்று. இதில் 2,500க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

9/11 பயங்கரவாத தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details