தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10 am - வெறிச்சோடிய டாஸ்மாக்

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news
Top 10 news

By

Published : May 17, 2020, 10:08 AM IST

கடைசி பொருளாதார ஊக்க அறிவிப்புகள்; சாதாரண மக்களுக்கு கை கொடுக்குமா?

டெல்லி: பொருளாதார ஊக்க அறிவிப்புகளின் கடைசி கட்ட அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.

உ.பி. விபத்து; பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

டெல்லி: அவுரியா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்: நிர்மலா சீதாராமனிடம் சிதம்பரம் கேள்வி

டெல்லி: நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சித்ராமன் வெளியிட்ட மூன்றாவது அறிவிப்பில் தேனீ வளர்ப்பு திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை அடுத்து நடப்பு நிதி ஆண்டு அதாவது 2020 -2021 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தேனீ வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2,400 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளபோது மறுபடியும் எவ்வாறு நிதி ஒதுக்க முடியும் என ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மாற்றுத்திறனாளிகளுக்கு 81,000 சிறப்பு முகக்கவசங்கள் வழங்கப்படும்’ - தமிழ்நாடு அரசு

சென்னை: செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்திற்கு ஏதுவான உதடு மறைவற்ற 81,000 முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

“திமுகவினர் தங்கள் மது ஆலைகளை மூடுவார்களா?” - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: திமுகவினர் வைத்துள்ள மது ஆலைளை மூடி முன் உதாரணமாக செயல்பட முடியுமா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊர் கட்டுப்பாட்டால் வெறிச்சோடிய டாஸ்மாக் - நாகையில் அதிசயம்!

நாகப்பட்டினம்: விழுந்தமாவடி அருகே ஊர் கட்டுப்பாட்டால் வெறிச்சோடி காணப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையைக் கண்டு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சேலம் : ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனைவிக்காக புல்லாங்குழல் இசைக் கலைஞராக மாறிய தவான்!

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், புல்லாங்குழல் இசைக்கும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மத்திய அரசு அறிவிப்பால் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் - டி.எஸ். ஹூடா

ஹைதராபாத்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் குறித்து ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் பட், ஓய்வுபெற்ற ராணுவ அலுவலர் டி.எஸ். ஹூடாவிடம் பிரத்யேக நேர்காணல் மேற்கொண்டார்.

ஊடரங்கு தளர்வு: விமானப் போக்குவரத்தை தொடங்குகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: கரோனா பாதிப்பால் விமான சேவை நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், நிதி நெருக்கடி காரணமாக விமான போக்குவரத்தை தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details