தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - latest news in chennai

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Oct 15, 2020, 12:53 PM IST

1. அனுபவமே பாடம் - ரஜினிகாந்த் ட்வீட்

சென்னை: ராகவேந்திரா மண்டபம் சொத்துவரி விவகாரத்தில் ‘அனுபவமே பாடம்’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2. குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியினர்: டி.கே. சிவகுமார் கடும் தாக்கு

பெங்களூரு கலவரம் தொடர்பாக குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர்களின் பெயரை வெளியிட்டதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

3.பற்றி எரியும் அண்ணா பல்கலைக்கழகம் - உதயநிதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பற்றி எரிவதைப் போன்ற புகைப்படம் ஒன்றை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

4.'கொலைகார சாதனையை ரசித்து ருசித்தவர் முத்தையா முரளிதரன்!'

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு கடிதம் எழுதியுள்ளார்.

5.டொனால்ட் ட்ரம்ப் மகன் பேரோனுக்கு கரோனா உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் பேரோன் ட்ரம்புக்கு கரோனா பாதிப்பு உறுதியானதாக அவரது தாயார் மெலெனியா தெரிவித்துள்ளார்.

6.ஏர் இந்தியா மோசமான நிதி சுமையைச் சந்தித்துவருகிறது - ஹர்தீப் பூரி

ஏர் இந்தியா விமான நிறுவனம் மோசமான நிதிச்சுமையைச் சந்தித்துவருவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளது.

7. தமிழ் பள்ளிக்காக குரல் கொடுத்த குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

காந்திநகர்: அகமதாபாத்திலுள்ள தமிழ் பள்ளி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

8.லே மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல்: மும்முனை போட்டி

லே (லடாக்): அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் லடாக் தன்னாட்சி ஹில் மேம்பாட்டுக் கவுன்சில், லேவின் 26 இடங்களுக்கான தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இந்தத் தேர்தல்களில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

9. ஒடிசாவில் 22 நாள்களாக 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை!

ஒடிசா: பெற்றோருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு ஓடிவந்த 17 வயது சிறுமி, 22 நாள்களாக பாலியன் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

10. 'குஷ்பூவிற்கெல்லாம் பதவி அளிக்கமுடியாது என பாஜகவினர் பேசுவது கேட்கிறதா?'

மூளைச்சலவை செய்து என்னை பாஜகவினர் கட்சியில் இணைத்துள்ளனர் என்றும், கணவரின் அழுத்தத்தால் நான் பாஜகவில் சேர்ந்ததாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூறுவதன் மூலம் அவர்களது சிந்தனை எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது என்பது புலனாகிறது என குஷ்பூ தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைகளை கடுமையாக சாடியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details