தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat 11 am news
etv bharat 11 am news

By

Published : Aug 23, 2020, 10:56 AM IST

யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!

சென்னை : யூடியூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன், அவரது தாய் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எளிய முறையில் குறட்டையை குறைக்கலாம்! ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்னை என்றால், அது குறட்டைதான்! அருகில் இருப்பவர்களுக்கும் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும் குறட்டையால், நமக்கு ஆரோக்கியமான தூக்கமும் இல்லாமல் நாளே சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வளிக்கும் எளிய வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விநாயகர் பொறித்த நாணயங்கள் - விழிப்புணர்வு ஏற்படுத்திய சலூன் கடைக்காரர்

நீலகிரி : விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சலூன் கடைக்காரர் ஒருவர், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வைத்து வழிபாடு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய இந்து முன்னணி: காவல் துறையினரிடம் வாக்குவாதம்!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியினர் அனுமதியின்றி அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததால் காவல் துறையினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் பெறவிருக்கும் அபிராமம் ஆய்வாளர் ஜான்சி ராணி!

ராமநாதபுரம்: 15 வருடங்களுக்கு மேலாக காவல்துறையில் பணியாற்றிவரும் பெண் ஆய்வாளர் ஜான்சி ராணி உள்துறை அமைச்சகம் அறிவிக்கும் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவரைப் பற்றிய செய்தித் தொகுப்பு...

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து- ஹர்ஷ் வர்தன்

லக்னோ : கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்று சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து!

ஹதராபாத்: தெலங்கானாவின் தண்டிகல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

கோவிட் - 19: பேருந்து இருக்கையில் மாற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக பேருந்து இருக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொத்துக்காக மனைவி கொலை: கணவர் உள்பட 6 பேர் கைது!

பெங்களூரு: கர்நாடகாவில் சொத்துக்காக மனைவியை கொலை செய்த கணவர், மகன் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் ராஷி கண்ணா

ராஷி கண்ணா புகைப்படத் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details