ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில் 4ஆம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. காலை உணவு இடைவேளை காரணத்தால் 3ஆம் கட்ட வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு அரைமணி நேரம் தாமதமானது.
4ஆம் கட்ட வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 27,843 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 9,146 வாக்குகள் பெற்றுள்ளார்.