சென்னை பசுமைவழிச் சாலையில் ஓபிஎஸ் இல்லத்தில் அவரை சந்தித்த பின்னர் அவரது ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியுள்ள எடப்பாடி பழனிசாமியின் ஊழல் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டால் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்படுவார். ஜூலை 11ஆம் தேதி காலையில் வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாகவே அமையும். அந்த வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு பொதுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா என்று தெரியவரும்.