சென்னை:அதிமுக பொதுக்குழுவை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது , "வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனைப்படியே முடிவு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் திட்டமிட்டப்படி நடைபெறும். பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார், தீர்மானத்தையும் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்" என தெரிவித்தார்.