சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1,295 கோடி, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.142 கோடி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் சார்பில் ரூ.325 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.372 கோடி, பேரூராட்சிகள் இயக்கத்தின் சார்பில் ரூ.9 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
ரூ.2000 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் - முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைப்பு - 2, 181 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை
சென்னை: 2,181 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு செய்யப்பட்ட திட்டங்களை தீவு மைதானத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் கூவம் கரையோரம் நான்கு லட்சம் தாவரங்கள் நடவு செய்யும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.
குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.906 கோடி, பேரூராட்சிகள் இயக்கத்தின் சார்பில் ரூ.24 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ. பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:'கை தட்டுங்கண்ணே' - சட்டப்பேரவையில் பாராட்டை கேட்டு வாங்கிய துணை முதலமைச்சர்!