தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் நாடியுள்ளது. இதையடுத்து ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தவது தொடர்பாக முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.