இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விடுத்த அறிக்கையில், 'காவிரி வடிநிலத்தின் ஒன்பது பாசன அமைப்புகளையும் மேம்படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை, தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்த தொழில்நுட்பப் பொருளாதார அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
'நடந்தாய் வாழி காவிரி திட்டம்' - செயல்படுத்த பழனிசாமி கோரிக்கை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: நடந்தாய் வாழி காவிரி திட்டத்தினை மத்திய அரசு விரைந்து செயல்படுத்தக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசிற்கு வழங்கிய அனுமதி திரும்பப் பெறவும், பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 152ஆக உயர்த்த தேவையான அனுமதியை வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது.
அதேபோல் மாநிலத்தில் நீர் ஆதாரங்கள், நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுதலை தடுக்கவும், பழைய நீர் ஆதாரங்களை மேம்படுத்துவும் தேவையான நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம். மேலும் மெட்ரோ, சென்னையில் புதிய விமான நிலையம், ராணுவ தளவாட உற்பத்தி மையம், உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், ராமநாதபுரம், நெய்வேலி பகுதிகளுக்கு விமான சேவை நடந்தாய் வாழி காவிரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அனுமதியும், நிதியும் ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்ட்டுள்ளது.