தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 9:00 PM IST

ETV Bharat / state

தலைமறைவான பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் மதனுக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'

EOW Look out notice to Pranav Jewelery owners: பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவை பிடிப்பதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை:திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட 'பிரணவ் ஜுவல்லரி' நகை கடை நிறுவனம் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை முதலீடு பெற்று மோசடி செய்ததாக எழுந்தது. இந்த புகாரை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரத்தை வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்த பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் இரண்டு சதவீதம் வட்டி, பத்து மாதங்கள் பிறகு செய்கூலி சேதாரம் இன்றி 106 கிராம் தங்கம் கொடுக்கப்படும் எனக் கூறி, பல வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

சுமார் ரூ.47 கோடி மோசடி; 100 சவரன் நகை பறிமுதல்:இதையடுத்து பிரணவ் ஜூவல்லரிக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனைகள் மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில், சுமார் 47 கோடி ரூபாய்க்கு மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், 100 சவரன் தங்க நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இதேபோன்று, பிரணவ் ஜுவல்லரி என்ற பெயரில் 11 கிளை நிறுவனங்களை நடத்தி போலி நகைகள் மற்றும் கவரிங் நகைகளை வைத்து பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். மேலும், இந்த பிரணவ் ஜுவல்லரி நிறுவனம் தொடர்பாக வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மாலில் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட போது சிலரை கையும் களவுமாக பிடித்தனர்.

ஏமாந்தவர்கள் 'குற்ற மேளா'-வில் புகார் செய்யலாம்:இதைத்தொடர்ந்து, அவர்களிடம் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரணவ் ஜுவல்லரி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரைப் பெறுவதற்கு 'புகார் மேளா' என்ற ஒன்றை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பிரணவ் ஜூவல்லரியின் உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகாவை பிடிப்பதற்கு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' (LookOut Notice) வழங்கி உள்ளனர். இதனை அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட நிலையில், இதுகுறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படிங்க:நகை சீட்டு மோசடியில் சிக்கிய பிரணவ் ஜுவல்லர்ஸ்.. போலீஸ் பட்டாளம் குவிப்பு.. கும்பகோணத்தில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details