தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எண்ணூர் அனல்மின் நிலைய வழக்கு: டான்ஜெட்கோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - Conveyor carrying coal

சென்னை: மீனவர் செல்வராஜ் துரைசாமி என்பவர் தொடர்ந்து வழக்கில் டான்ஜெட்கோ அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Aug 12, 2021, 8:05 AM IST

காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியையும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கொற்றலை ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து கன்வேயர் பெல்ட்டை கொண்டு செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் முன்னதாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை விசாரணைக்கு எடுத்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கன்வேயர் அமைப்பது தொடர்பாக டான்ஜெட்கோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:கால் உணர்வை இழந்த குழந்தை - நடக்க வைத்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்கள்

ABOUT THE AUTHOR

...view details