தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கல்லூரிகளில் கரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டதால் விடுதிகளில் இருந்தும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகள் 7ஆம் தேதி திறப்பு - student hostels open in 7th
சென்னை: பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில், விடுதிகள் வரும் 7ஆம் தேதி முதல் செயல்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
பொறியியல்
தற்பொழுது கரோனா தொற்று குறைந்துள்ளதாலும், கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் மையங்கள் காலிசெய்யப்பட்டதாலும் இளங்கலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் இருந்தே மாணவர்களின் விடுதிகளும் செயல்படும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'சூரப்பா அப்பழுக்கற்றவர்' - தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு கடிதம்?