தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாெறியியல் படிப்பில் சேர ரேண்டம் எண் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

பாெறியியல் படிப்பில் சேர ரேண்டம் எண் வெளியீடு
பாெறியியல் படிப்பில் சேர ரேண்டம் எண் வெளியீடு

By

Published : Jun 7, 2023, 7:00 AM IST

சென்னை: பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பம் பதிவு செய்துள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 பேருக்கும் ரேண்டம் எண் நேற்று (ஜூன் 6) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும்போது, முன்னுரிமை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளங்கலைப் பட்டப் படிப்புகளான பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்கு, கடந்த மே 5ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.

மீதம் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 14ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:IIT Madras:இந்தியாவிலேயே முதல்முறையாக கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளை அமைக்கும் மெட்ராஸ் ஐஐடி..!

மேலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்களுக்கு வரும் 9ஆம் தேதி வரையில் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பம் செய்த 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு கட் ஆப் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும் முறை:

ஒரு வேளை கட் ஆப் மதிப்பெண்கள் இரு மாணவர்களுக்குச் சமமாக இருந்தால், முதலில் கணித மதிப்பெண்ணும், இரண்டாவதாக இயற்பியல் மதிப்பெண்ணும், மூன்றாவதாக விருப்பப் பாடத்தின் மதிப்பெண்ணும் கணக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பாடங்களின் மதிப்பெண்ணும் சமமாக இருந்தால், அடுத்தடுத்தாக உள்ள 12ஆம் வகுப்பின் மொத்த மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்.

அதுவும் சமமாக இருந்தால், 10ஆம் வகுப்பில் மாணவர்கள் எடுத்த மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சமமாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட அனைத்து வழிமுறைகளும் சமமாக இருந்தால் மட்டுமே ரேண்டம் எண் கணக்கீடு செய்யப்படும். அதன்படி, ரேண்டம் எண் பெற்ற மாணவர்களுக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details