தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்கப்பூர் சிறப்பு விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாற - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த சிறப்பு விமானம், ஓடுபாதையில் ஓட தொடங்கியபோது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அவசரமாக நிறுத்தப்பட்டது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

By

Published : Jun 23, 2020, 3:36 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் இன்று( ஜூன் 23) பகல் 1 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனா். பயணிகளில் 17 பேர் சிங்கப்பூர் நாட்டை சோ்ந்தவா்கள். மீதி 139 போ் NRI எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியா்கள். இவர்கள் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் சிங்கப்பூா் செல்கின்றனா்.

விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய போது,விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுப்பிடித்தாா். இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினாா்.

இதையடுத்து இழுவை வாகனங்கள் மூலம் விமானம் இழுத்து கொண்டுவந்து விமானம் நிற்கும் இடத்தில் நிறுத்தப்பட்டது.

விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, விமான பொறியாளா்கள் விமானத்திற்குள் ஏறி தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் பிற்பகல் 2.10க்கு சிங்கப்பூா் புறப்பட்டு சென்றது.

விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவித சம்பவம் தவிா்க்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details