தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில்பாலாஜி காவல் நீட்டிப்பு .. அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகிறதா அமலாக்கத்துறை? - லட்சுமி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜர்படுத்த அமலாக்கத்துறையினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்கு
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்கு

By

Published : Aug 12, 2023, 10:46 PM IST

சென்னை:சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 6 நாட்களாக காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து சட்டவிரோதமாக 1 கோடியே 64 லட்ச ரூபாய் அவர் மற்றும் அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் குறித்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் கரூரில் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பங்களா குறித்தான தகவல் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அமலாக்கத்துறையினர் பங்களாவில் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த பங்களாவை முடக்கினர். 30 கோடி ரூபாய் மதிப்புடைய இடத்தை 10 லட்ச ரூபாய்க்கு வாங்கிய காரணத்திற்காக பங்களா பெயரில் இருந்த செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளனர்.

செந்தில்பாலாஜி மீதுள்ள மோசடி வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அமலாக்கத்துறையினர் ஆவணங்களை பெற்று, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 6 நாட்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்துள்ளனர்.

இந்நிலையில் செந்தில்பாலாஜியின் 6 நாட்கள் கஸ்டடி இன்றுடன் முடிவடைந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை அறிக்கையையும் சமர்பித்தனர்.

மேலும் வருகிற 25ஆம் தேதி வரை செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். பின்னர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து செந்தில்பாலாஜியிடம் நடத்திய விசாரணை குறித்த அறிக்கையை அமலாக்கத்துறையினர் சமர்பிக்க உள்ளனர்.

அமைச்சர் செந்தில பாலாஜி அமலாக்கத்துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தை வைத்து அடுத்தக்கட்ட சோதனைக்கு அமலாக்கத்துறையினர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக விசாரணையின் போது பினாமி பெயரில் பல சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து முதற்கட்டமாக கரூரில் உள்ள பங்களாவை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். இதே போல அசோக் குமார், அவரது மனைவி நிர்மலா மற்றும் மாமியார் லட்சுமி ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால் அவர்கள் மீது பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செந்தில்பாலாஜியை அடுத்து முக்கிய நபராக பார்க்கப்படும் அவரது சகோதரர் அசோக் குமார் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் தாமாக ஆஜராகும் வகையில் அமலாக்கத்துறையின் பல வகைகளில் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சாதி, இன உணர்வை தவிர்ப்பதற்காக நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details