தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் சமுதாயக் கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி சென்னையில் இன்று (டிச.29) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்ததாவது, "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 91 திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தற்போது வரை சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களின் விவரங்களை பல்கலைக்கழக மானியக் குழுவின் இணையதளத்தில் ஆதார் எண்ணுடன் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, டிசம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், அவர்களுடைய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.