தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு சிற்றுந்து மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு! - பேருந்து மோதிய விபத்து

சென்னை: எம்ஜிஆர் நகரில் அரசு சிற்றுந்து மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்து மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு
பேருந்து மோதிய விபத்தில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு

By

Published : Dec 4, 2020, 10:02 AM IST

Updated : Dec 4, 2020, 1:15 PM IST

சென்னை எம்ஜிஆர் நகர் சூளைபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சென்னை மாநகராட்சி 138 வார்டில் தற்காலிகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவரது மகன் மணிகண்டன் (11) அதே பகுதியிலுள்ள அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில், நேற்றிரவு சிறுவன் மணிகண்டன் வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது வளசரவாக்கத்திலிருந்து தி.நகர் நோக்கிச் சென்ற அரசு சிற்றுந்து மோதியதில் மணிகண்டன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த சிறுவன் மணிகண்டன்

இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர், விபத்து ஏற்படுத்திய அரசு சிற்றுந்து ஓட்டுநர் சிவலிங்கம் (45) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த லாரி

Last Updated : Dec 4, 2020, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details