சென்னை:வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருவதால், சென்னை மாநகராட்சி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சுரங்கப்பாதைகளில் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளதால், 11 சுரங்கப்பாதைகள் மற்றும் ஏழு சாலைகளில் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அதாவது கோடம்பாக்கம் துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட 11 சுரங்கப்பாதைகளிலும், கே.கே.நகர் - ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர்- டாக்டர் சிவசாமி சாலை உள்பட ஏழு சாலைகளிலும், நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த சுரங்கப் பாதைகளில் வழியே செல்வதை தவிர்க்கும்படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் நீர் தேங்கி நிற்கும் சுரங்கப்பாதைகளில், அதி வேக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும மழை கொட்டி தீர்த்து வருவாதால் சென்னை மாநகராட்சி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் 044-25619204, 044-25619206 ஆகிய தொலைபேசி எண்களுக்கு 1913 என்ற உதவி எண் மற்றும் 9445477205, 9445025819 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கனமழை: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்..