தமிழ்நாடு மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை முழுவீச்சில் தொடங்கி அதன்பின் தேவைக்கேற்ப மின்சாரத்தை கொள்முதல் செய்வது சரியான நடவடிக்கையாக அமையும். பழமைவாய்ந்த தூத்துக்குடி, மேட்டூர் போன்ற இடங்களில் உள்ள அனல் மின் நிலையங்களை நவீனப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
அதனை நவீனப்படுத்தாமல், அங்கு உற்பத்தியை நிறுத்தி தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால் மாநில மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து மின்வாரிய சங்கத்தின் தலைவர்கள் கூறுகையில், "மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களைப் பதவியிறக்கம் பணியிட மாற்றம் செய்கிறார், இப்போதுள்ள மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால்.
புதிய உற்பத்தித் திட்டங்களின் கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்படுவதுடன் ஊழலுக்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டிய பின்பும் வாரியம் நிர்வாகம் உணர மறுக்கிறது. அதேபோல செயலகப் பிரிவு, நிர்வாகப் பிரிவு போன்றவற்றில் இதே நடவடிக்கையை எடுத்துவருகிறார்.