தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரத்தில் மின் திருட்டு - ரூ.10.51 லட்சம் வசூல் - 10.51 லட்சம் ரூபாய் வசூல்

தாம்பரம் பகுதியில் மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 10.51 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது.

தாம்பரத்தில் மின் திருட்டு
தாம்பரத்தில் மின் திருட்டு

By

Published : Nov 2, 2021, 2:07 PM IST

சென்னை :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அமலாக்க பிரிவின் அலுவலர்கள் சென்னை தெற்கு- II மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாம்பரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தாம்பரத்தில் 10 இடங்களில் மின் திருட்டு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ஒன்பது லட்சத்து 78 ஆயிரத்து 40 ரூபாய் இழப்பீட்டு தொகையாக அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.73 ஆயிரத்தை செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

இதையடுத்து, சென்னையில் மின் திருட்டு தொடர்பான தகவல்களை, சென்னை அமலாக்க பிரிவு செயற்பொறியாளருக்கு 9445857591 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்கபிரிவு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நீட் தேர்வு: நாமக்கல் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்; தேசிய அளவிலும் சாதனை

ABOUT THE AUTHOR

...view details