தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவின் மாவட்டப்பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு!

திமுகவின் மாவட்டப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் பகுதிகள் உள்ளிட்டவை குறித்து திமுக பாெதுச் செயலாளர் துரைமுருகன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Etv Bharat திமுகவின் மாவட்டப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு
Etv Bharat திமுகவின் மாவட்டப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு

By

Published : Sep 18, 2022, 5:45 PM IST

சென்னை:திமுகவின் 15ஆவது உட்கட்சி பொதுத்தேர்தல் வரும் 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஆளும் கட்சியான பின்னர் மாவட்டப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பலத்த போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து திமுக பாெதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திமுக-வின் 15ஆவது பொதுத்தேர்தல் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு நடைபெறுகிறது. மாவட்ட வாரியாக 22ஆம் தேதி கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியம், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம் , திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மாநகருக்கு நடைபெறுகிறது.

23ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) - நீலகிரி, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு
சேலம் மத்திய, கரூர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, திருச்சி மத்தியம் ஆகியப் பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

24ஆம் தேதி (சனிக்கிழமை) - புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு
விழுப்புரம் மத்தியம் ஆகியப்பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) - வேலூர் கிழக்கு (இராணிப்பேட்டை), வேலூர் மத்தியம், வேலூர் மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு,சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகியப் பகுதிகளுக்கு நடைபெறுகிறது.

வேட்புமனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில்
தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றியம், நகரம், நகரியம், பகுதி, மாநகரச்செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத் தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமன விதி மீறல் - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details