சென்னை:தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்குப் பரிசுகள், பணம் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க ஏழு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணம், பரிசுப்பொருள்கள், போதைப்பொருள்கள் எடுத்துச் செல்கிறார்களா எனப் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.