தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவுசெய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது.

election commission allotted pot symbol for vck
election commission allotted pot symbol for vck

By

Published : Mar 22, 2021, 4:59 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகிறார்கள். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்தத் தேர்தலில் நான்கு தனித்தொகுதிகள், இரண்டு பொதுத்தொகுதிகள் என ஆறு இடங்களில் போட்டியிடுகிறது.

இந்தத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த விசிகவிற்கு தற்போது தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details