தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றால் மோடிக்கு குட்டு வைப்பார் - ஸ்டாலின்

சென்னை: தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று மோடிக்கு குட்டு வைப்பார். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

pandian

By

Published : Apr 6, 2019, 9:36 AM IST

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தா.பாண்டியன் கூறியதாவது, "ஸ்டாலின் கலைஞர் மறைவுக்கு பின் மிகுந்த அரசியல் முதிர்ச்சியோடு இந்த கூட்டணியை அமைத்துள்ளார். இக்கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த நாட்டை பிடித்த கேடு கெட்டவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டை மீட்கவே அமைந்துள்ளது.

அம்பானி மற்றும் அதானியிடம்தான் இந்த நாடே சிக்கி இருக்கிறது. இவர்கள் இருவர்களுக்கும் மோடி மற்றும் அமித்ஷாதான் நெருங்கிய நண்பர்கள். தற்போது உள்ள அரசு, கொள்ளையர்களை வைத்து கொள்ளையடிக்கவில்லை. அதிகாரிகளை வைத்து கொள்ளையடிக்கின்றனர்.

ஆனால் நம்முடைய கூட்டணி பொறுப்புள்ள கூட்டணி. எனவே தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்களித்தால் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று மோடிக்கு குட்டு வைப்பார். எனவே அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழச்சி என்கிற பெயருக்காகவே 10 ஆயிரம் வாக்குகள் விழ வேண்டும்" என்று அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details