தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடைத்தேர்தலின்போது பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும் - தலைமை தேர்தல் அலுவலர் - லைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹூ

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பேனர் வைப்பதில் தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

byelection

By

Published : Sep 25, 2019, 6:17 PM IST

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு, "விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பதினெட்டு பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்புக் குழுக்களும் சேர்ந்து பணியாற்றவுள்ளன.

இந்தத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேனர் விவகாரங்களில் தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். இந்த தேர்தல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் துறையினருடன் வீடியோ கான்பிரன்சிங் ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க:

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details