சென்னை:உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, மரியாதை நிமித்தமாக ஆஸ்திரேலிய நாட்டுத் தூதரக அலுவலர்கள் சந்தித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ' தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறை வளர்ச்சியை பெரிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நோக்கில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 83 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா கையெழுத்திட்டு இருக்கிறது.
மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்.
கல்லூரிகள் திறக்கப்படுமா?
தமிழ்நாட்டின் உயர் கல்வி வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியா உறுதுணையாக இருக்கும். முதலமைச்சர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து கல்லூரிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.
பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அறிக்கைத் தரப்படும்.
அதன் அடிப்படையில் முதலமைச்சர் சொல்லும் வழிகாட்டுதலின்படி, பள்ளிகளைத் திறக்க முடிவு செய்வோம்' என விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?