தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு ரெயின்கோட் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு ரெயின்கோட், ஆங்கிள்பூட்ஸ் கொள்முதல் செய்வதற்கும்,மாணவர்களுக்கு காலணி வழங்கவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.

education-department-planing-to-provide-raincoat-to-government-school-students
education-department-planing-to-provide-raincoat-to-government-school-students

By

Published : Dec 20, 2021, 11:43 AM IST

சென்னை : அரசுப்பள்ளி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு Rain Coats, Ankle Boots வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 2022-2023 கல்வியாண்டில் மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப் பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மட்டும் ரெயின்கோட், ஆங்கிள்பூட்ஸ் வழங்குவதற்கான கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது.

மேலும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க சுமார் 26 லட்சம் காலணிகள் கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் கோரியுள்ளது. பள்ளி திறந்த உடன் பாடப்புத்தகங்கள் வழங்கும் போதே பிற கல்வி உபகரணங்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பழமையான பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ABOUT THE AUTHOR

...view details