சென்னை:அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்ந்து எடுக்கும் விவகாரத்தில் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை இழுபறியாக நீட்டித்து வருகிறது. இதனால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கும் இடையே பதவி போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தனித்தனியாக ஆதரவாளர்கள் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே, சமீபத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் இன்று (ஜூன்.21) ஈபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவு தெரிவித்திருந்தார்.
ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு வந்த ஆதரவாளர்கள் பொதுக்குழு நெருங்கி வரும் வேலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் பொதுக்குழுவைத் தள்ளிவைக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பினர் ஈபிஎஸ் தரப்பினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஈபிஎஸ் தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என தெரிவித்தார்.
மற்றொரு புறம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுவைத் தடை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர். இப்படி அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் ஈபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவை நடத்தியே ஆக வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஈபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு வந்த ஆதரவாளர்கள் இதனிடையே, பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் ஈபிஎஸ்சை மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தில் ஈபிஎஸ்க்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பப்பட்டது.
நெருங்கும் பொதுக்குழு : ஓபிஎஸ் ஆதரவு வட்டத்தை காலி செய்யும் ஈபிஎஸ்.. ஓபிஎஸ் வீட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஜூன் 22) விசாரிக்கிறது.
இதையும் படிங்க: அதிமுக விதிகளை திருத்த தடை கோரிய மனு நாளை விசாரணை - நடக்குமா பொதுக்குழு ?