இதுகுறித்து அக்கடிதத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி மத்திய சுற்றுப்புறசூழல், வனத்துறை அமைச்சகம், சுற்றுப்புற சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணையை வெளியிட்டது. அதில், கடற்கரை, அதற்கு வெளியில் நிறுவப்படும் எண்ணெய், எரிவாயு ஆய்வு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு திட்டங்கள், ’ஏ’ பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின் மத்திய சுற்றுப்புறசூழல், வனத்துறை அமைச்சகம் 16ஆம் தேதியன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது.
ஹைட்ரோகார்பன் ஆய்வு, பிரித்தெடுக்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கு உணவளிக்கும் வளமான காவிரி டெல்டா பகுதியில் இதுபோன்ற பல திட்டங்கள் அமைக்கப்படுவதால், உணர்வுப்பூர்வமாகவும் கடுமையாகவும் எதிர்ப்பு கிளம்புகிறது.