சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இன்று காலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஐ.ஆர்.எஸ்.ஐ என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் வெளிநாட்டில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு மருத்துவர்களுக்கு விருது! - தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை: கிண்டியில் ஐ.ஆர்.எஸ்.ஐ என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
வெளிநாட்டு மருத்துவர்களுக்கு முதலமைச்சர் விருது
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கிய மருத்துவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.