தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐ.நா., பாகிஸ்தானை மேற்கோள்காட்டிய அமலாக்கத்துறை - செந்தில் பாலாஜி வழக்கில் சுவாரஸ்யம்! - Pakistan

செந்தில் பாலாஜி மீதான பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில், ஐ.நா. மற்றும் பாகிஸ்தானில் பின்பற்றப்படும் சட்ட விதிகளை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 12, 2023, 1:49 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த மாதம் அவரை கைது செய்தது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள ஆட்கொணர்வு மனுவை மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று (ஜூலை 12) இரண்டாவது நாளாக விசாரணை செய்து வருகிறார். அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

அப்போது வாதிட்ட அவர், ''கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்க காலம் வரை உலகம் முழுவதும் பல நாடுகள் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டு காரணமாக சிரமப்பட்டு வந்தன. இதனைத் தடுக்க உலக நாடுகள் ஒன்று சேர்ந்து ஐ.நா. மூலம் இதற்கு எதிராக கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன.

இதன் அடிப்படையில் இந்தியாவிலும் பிஎம்எல்ஏ சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. உலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையான சட்டம் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன.

அது மட்டுமல்லாமல், ஐ.நா. நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக Financial Action Task Force என்ற டாஸ்க் போர்ஸ் ஒன்றையும் உருவாக்கியது. அதில் 40 விதிகளைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு நாட்டின் சட்டமும் இந்த 40 விதிகளுக்கு கீழ் இருக்கிறதா என்று பார்த்தது. அதை வைத்து உலக நாடுகளை கருப்பு, கிரே (Gray), வெள்ளை என்று தரம் பிரித்தது.

பாகிஸ்தான் எல்லாம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் பணியில் சரியாக செயல்படாத காரணத்தால் கிரே லிஸ்ட்டில் உள்ளது. ஆனால், நாம் விதிகளை முறையாக கடைபிடித்து வருகிறோம். இந்த லிஸ்ட்டில் உள்ள 5 உறுப்பு நாடுகள் நம் விதிகளை கண்காணித்து வருகின்றன.

அவை நம்முடைய சட்ட நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன. அதனால் சட்ட ரீதியாக இது போன்ற வழக்குகளில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியை ஆவணங்களின் அடிப்படையில்தான் கைது செய்தோம். கைது செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.

அதேபோல் அவரிடம் கூடுதல் ஆதாரங்களை வாங்க எங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு. அவரை நாங்கள் விசாரிக்க முடியாது என்றால், அது எங்கள் விசாரணை ஆணையத்தின் அடிப்படையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஒருவர் தவறு செய்ததாக தோன்றினால் அமலாக்கத் துறையால் மட்டுமே விசாரிக்க முடியும்.

பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை விசாரிக்க உள்ளூர் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை. ஊழல் தொடர்பாக சம்பாதித்த பணத்தை விசாரிக்க அமலத்துறைக்கு அதிகாரம் உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Senthil Balaji:அமலாக்கத்துறையின் விசாரணையை எதிர்கொள்ளாதது ஏன்? - நீதிமன்றம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details