சென்னை: வேப்பேரியில் இரண்டு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் பகுதியில் தாக்கர் தெருவில் உள்ள சையது அபுதாகிர் என்பவரின் வீட்டில் காலை 9.20 மணி முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ED raids: சென்னை வேப்பேரியில் அமலாக்கத்துறை சோதனை! - அமலாக்கத்துறை சோதனை
சென்னை வேப்பேரியில் இரண்டு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Enforcement department raids in Chennai Vepery
மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் துரப் என்னும், துடைப்பம் மொத்த வியபாரம் செய்து வருபவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். வேப்பரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் இஸ்மாயில் அக்ஸர் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Last Updated : Jul 27, 2023, 10:59 AM IST