சென்னை : நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலன் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், இருமல் ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, லேசான கரோனா பாதிப்பும் இருப்பது தெரிய வந்தது. பின்னர் சில நாட்களில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், விரைவில் வீடு திரும்புவேன் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.