தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் முறை தொடரும் : தமிழ்நாடு அரசு - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை : வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறையே தொடர்ந்து அமலில் இருக்கும் என தமிழ்நாடு அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

e-pass-system-will-continue-for-those-coming-from-abroad-and-other-states
e-pass-system-will-continue-for-those-coming-from-abroad-and-other-states

By

Published : Aug 14, 2020, 7:37 PM IST

பொது மக்கள் தங்களது முக்கியப் பணிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் தடையின்றி பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.08.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணையும் இணைத்து இ-பாஸ் கோரி விண்ணப்பித்தால், எவ்விதத் தாமதமும் தடையும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக. 14) அறிவித்தார்.

இருப்பினும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் நிச்சயம் இ-பாஸ் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து பூரண குணமடைந்த ஆளுநர்!

ABOUT THE AUTHOR

...view details