தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் விமான நிலைய பயணத்துக்கும் இ- பதிவு முறை இன்று முதல் அமல்!! - chennai airport meenambakkam

சென்னை: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் விமான பயணிகளுக்கு இ-பதிவு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணத்துக்கும் இ- பாஸ் முறை இன்று முதல் அமல்!!
சென்னை உள்நாட்டு விமான நிலைய பயணத்துக்கும் இ- பாஸ் முறை இன்று முதல் அமல்!!

By

Published : May 17, 2021, 12:40 PM IST

கரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவா்களுக்கு இ-பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானநிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பதிவு முறை இன்று (மே.17) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் அத்தியாவவசிய பணிகளுக்காக பயணிக்கும் பயணிகள் அனைவரும், தங்களின் செல்போன்களில் eregister.tnega.org என்ற தளத்தில் ஆவணங்களுடன் பதிவுசெய்து, அதற்கான ஆதாரங்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய தமிழ்நாட்டிற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் அனைவரும், இன்று முதல் இ-பதிவுடன் பயணம் மேற்கொள்கின்றனா். சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று மிகவும் குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து புறப்படும் 33 விமானங்களில் 1,800 பயணிகளும்,சென்னைக்கு வரும் 35 விமானங்களில் 1,200 பேரும், மொத்தம் 68 விமானங்களில் 3 ஆயிரம் போ் மட்டுமே பயணிக்கின்றனா். அதிலும் ஹைதராபாத் விமானத்தில் 4, தூத்துக்குடி விமானத்தில் 6, கோயம்பத்தூர் விமானத்தில் ஒன்பது போ் மட்டுமே பயணிக்கின்றனா்.

அதோடு சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இரவு நேர விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு முதல் விமானம் காலை எட்டு மணிக்கு வருகிறது. அதேபோல், இரவு 9.15 மணிக்கு கடைசி விமானம் புறப்பட்டு செல்கிறது. கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து,அரசு தளா்வுகளை அறிவித்ததும்,சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் முந்தைய நிலைக்கு திரும்பும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனா்.

இதையும் படிங்க: நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details