தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வந்த தொகை எவ்வளவு? - Chief Minister's Public Relief Fund

சென்னை: கரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ளன.

Cm fund
Cm fund

By

Published : Apr 2, 2020, 4:59 PM IST

கரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய் தடுப்பு பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இப்பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிப்பை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகைகளின் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

அவரின் வேண்டுகோளினை ஏற்று, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட நிதி விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி,

* TVSமோட்டார் நிறுவனம் 5 கோடி ரூபாய் .

* சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் .

* Asian பெயிண்ட்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய் .

* சிம்சன்ஸ் நிறுவனம் 2 கோடி ரூபாய்.

* சண்முகா நிறுவனம் 1.25 கோடி ரூபாய் .

* எஸ்.ஆர்.மிஸ்ட் நிறுவனம் 1.15 கோடி ரூபாய்.

* தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் 1 கோடி ரூபாய் .

* தி.மு.க அறக்கட்டளை 1 கோடி ரூபாய் .

* நேஷனல் 1 கோடி ரூபாய் .

* தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் 1 கோடி ரூபாய் .

* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் 1 கோடி ரூபாய் .

* தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் 1 கோடி ரூபாய் .

* பஞ்சாப் அசோசியேசன் 50 லட்சம் ரூபாய் .

* GRT தங்க மாளிகை 50 லட்சம் ரூபாய் .

* தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 50 லட்சம் ரூபாய் .

* ராசி சீட்ஸ் நிறுவனம் 50 லட்சம் ரூபாய்.

* DLF foundation நிறுவனம் 50 லட்சம் ரூபாய்.

* GVG பேப்பர் மில்ஸ் 40 லட்சம் ரூபாய் .

* PALAVA TE நிறுவனம் 30 லட்சம் ரூபாய்.

* Sri cheran நிறுவனம் 30 லட்சம் ரூபாய்.

* VSM Wavesநிறுவனம் 30 லட்சம் ரூபாய்.

* சூப்பர் ஆட்டோ போர்க் பிரைவேட் லிமிடெட் 25 லட்சம் ரூபாய்.

* தி கொங்கு 25 லட்சம் ரூபாய்.

* சாகோ சர்வ் 25 லட்சம் ரூபாய்.

* KKBKH 25 லட்சம் ரூபாய்.

* அக்கினி ஸ்டீல் 25 லட்சம் ரூபாய்.

* கார்ப்ஃ நாமக்கல் 25 லட்சம் ரூபாய்.

* ரெனாட்டஸ் 25 லட்சம் ரூபாய்.

* Pon pure நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.

* ATRIA convergence நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.

* Roots mutt நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.

* Roots Industries நிறுவனம் 25 லட்சம் ரூபாய்.

* ஸ்ரீ ஹரிகிருஷ்ணா பேப்பர்ஸ் பிரைவேட் மிலிடெட் 20 லட்சம் ரூபாய் .

* Donfoss நிறுவனம் 15 லட்சம் ரூபாய்.

* கோல்டு ஈ நிறுவனம் 11 லட்சம் ரூபாய் .

* SVS Oil Mills நிறுவனம் 11 லட்சம் ரூபாய்.

* காஞ்சி காமகோடி பீடம், மெட்ராஸ் டாக்கிஸ், GVG கிராவ்ட் பிரைவேட் லிமிடெட், சிதம்பரம் ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்ட்ரி, GVG இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிமிடெட், SVA சின்டெக்ஸ், SVPB PB, KTV HEEL, KOG KTV, FABTEC I-ATTN, தமிழ் மான், ராசி அக்ரிகல்சர், KKSK, HI TECH, K. Ramasamy, RK. Umadhevi, MK. Alagiriஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.

இது தவிர, பிற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 31.3.2020 வரை வழங்கப்பட்ட மொத்த தொகை 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாயாகும். நன்கொடையளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீது அவ்வப்போது வழங்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: டெல்லி இஸ்லாமிய மதக் கூட்டத்தில் பங்கேற்ற மூவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details