தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க திமுக அனுமதி கோரியது. அதற்கு பேரவைத் தலைவர் தனபால் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள அரசு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுபோல், தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆனால், அத்தகைய தீர்மானத்தை இயற்ற இந்த அரசு அஞ்சுகிறது. மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர அதிமுகவிற்கு தில் இருக்க வேண்டும். அத்தகைய தில் இவர்களுக்கு இல்லை.
துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பு இதுகுறித்து கேட்டால், தீர்மானம் இன்னமும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆய்வில் இருக்கிறது என்பதற்கு ஆயுள் இல்லை என்று பொருள். பிகார், ஆந்திரா, கேரளா போன்ற மாநில முதலமைச்சர்களுக்கு இருக்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை’ என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க:‘நாங்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல’ - துரைமுருகன் அதிரடி