சென்னை:கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டும் பணிகளை மேற்கொள்ள அவசரம் காட்டி வரும் நிலையில், இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
நேற்று(ஜூலை 4) பதில் கடிதம் அளித்த மு.க.ஸ்டாலின், மேகேதாட்டு அணை கட்டுவதைத் தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது எனவும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தினார்.
கர்நாடக ஏற்கெனவே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டி உள்ளது. மேகேதாட்டு விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்து உள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒன்றிய அமைச்சரை இன்று டெல்லியில் சந்திக்கவிருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது, காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி தமிழ்நாடு பங்கீட்டு நீரை முறையாக வழங்க வேண்டும், மேகேதாட்டு அணைக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்கக்கூடாது.
தென்பெண்ணை கிளை நதியான மார்க்கண்டேய நதியில் அனுமதியில்லாமல், ஆந்திர அரசு தடுப்பு அணை கட்டிய விவகாரம் உள்ளிட்டவைகள் குறித்துப் பேசவுள்ளார்.
நதிநீர் இணைப்பு, நடுவர் மன்றம் அமைப்பது குறித்த தமிழ்நாடு அரசின் கோரிக்கையையும், அவர் மனுவாக ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரிடம் மனுவாக அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மார்கண்டேய நதியின் குறுக்கே அணை - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்