சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான மனுவை துரைமுருகன் திமுகவின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் அளித்தார். இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனுதாக்கல் செய்தார்.
போட்டியின்றி திமுக பொதுச்செயலாளராகும் துரைமுருகன் - Duraimurugan applied DMK General Secretary

15:36 September 03
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து துரைமுருகன் பேசுகையில், ' பயம் கலந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். திமுகவில் தொண்டனாக இருந்து உயர்ந்து வந்து இருக்கிறேன். கிடைக்கயிருக்கும் பொதுச்செயலாளர் பதவி என்பது பல முன்னோடிகள் அலங்கரித்த பதவி. இதில் நன்கு பணிபுரியவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இப்பதவிக்கு உண்டான அதிகாரங்கள் எதுவும் மாறவில்லை' என்றார்.
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, துரைமுருகன் போட்டியின்றி திமுக பொதுச்செயலாளராகிறார். அதேபோல், திமுக பொருளாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த டி.ஆர். பாலுவும் போட்டியின்றி, திமுக பொருளாளர் ஆகிறார்.