சென்னையின் முக்கியச் சாலைப் போக்குவரத்து மையமும், சந்தை வியாபாரம் நடக்கும் இடமுமான கோயம்பேடு பகுதி தற்போது பொதுமுடக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.
காய்கறி வியாபாரிகள், பேருந்து பயணிகள் என காலையில் ஜனரஞ்சகமாகக் காணப்படும் சென்னையின் முக்கியப் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.
முழு ஊரடங்கின் எதிரொலி: வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை! மதுரவாயல், அண்ணாநகர் போன்ற பகுதிகளிலிருந்து கோயம்பேட்டிற்கு வரும் பகுதிகளில் காவல் துறையினர் தடுப்பு போட்டு சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக நேற்று (ஏப். 24) இரவே சந்தை மூடப்பட்டது.
இதையும் படிங்க: ஒருநாள் பாதிப்பில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய கரோனா!