சென்னை: தெற்கு அந்தமான் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ. 29) காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை வரை சென்னையில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக கொளத்தூரில் கடந்த 2 மணி நேரத்தில் மட்டும் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.