தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை! - வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பனியின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில்
தமிழகத்தில்

By

Published : Feb 17, 2023, 5:34 PM IST

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(பிப்.17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும்(பிப்.18) வறண்ட வானிலையே நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 35.5 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதேபோல், குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 18.4 டிகிரி செல்சியஸ், குன்னூரில் 21.5 டிகிரி செல்சியஸ், உதகமண்டலத்தில் 25.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பதிவு ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, பனியின் தாக்கம் குறையும். தற்போது பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனிவரும் காலங்களில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறைச்சாலையில் தற்கொலை முயற்சி - வெளியான திடுக்கிடும் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details