சென்னை: TN weather : தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (டிச.25) முதல் நாளை மறுநாள் (டிச.28) வரை அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28.12.2021, 29.12.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மூடுபனி எச்சரிக்கை (25.12.2021, 26.12.2021): உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.