தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் தந்தையைக் குத்திக் கொன்ற மகன் - சென்னை

சென்னை: குடிபோதையில் தந்தையைக் குத்தி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சூரியபிரகாஷ்

By

Published : Apr 23, 2019, 2:56 PM IST

சென்னை பாடி மதுரவீரர் கலைவாணர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சூரியபிரகாஷ். குடிப்பழக்கம் உடைய இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் தமிழ்ச்செல்வன் அவருடைய மனைவி, சூரியபிரகாஷ், குமரன், பிரியா ஆகிய 4 பேரும் பழக்கடையை மூடி விட்டு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது இரவு 1.30 மணி அளவில் வழக்கம்போல் குடிபோதையில் வந்த சூரியபிரகாஷ் தந்தை தமிழ்ச்செல்வனிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தந்தையை குத்திவிட்டு சூரியபிரகாஷ் தலைமறைவானார்.

இதில், படுகாயமடைந்த தமிழ்ச்செல்வனை, அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து, ஜெ.ஜெ நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன் உடலைப் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த சூரிய பிரகாஷை கோயம்பேட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். சூரிய பிரகாஷ் மீது இபிகோ 302,506 ஆகிய இரண்டு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடிபோதையில் மகனே, தந்தையைக் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details