தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி அன்று போதையில் காவலரை தாக்கிய நபர் கைது.. மேலும் ஒருவருக்கு வலை வீச்சு! - சிவராஜ் தெரு

Police officer attacked by drunk man: தீபாவளி தினத்தன்று மது போதையில் காவலர் மற்றும் அவரது உறவினர்களை தாக்கி விட்டு, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மது போதையில் காவலரை தாக்கிய நபர் கைது
மது போதையில் காவலரை தாக்கிய நபர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 10:06 PM IST

சென்னை: தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க, அவ்வப்போது தாம்பரம் சிவராஜ் தெருவில் உள்ள, தனது மாமியார் வீட்டுக்கு வருவது வழக்கம்.

அந்த வகையில், தீபாவளி பண்டிகையின் போது, காவலர் தமிழரசன் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது மாமியார் வீட்டில் இருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பார்ப்பதற்கு வந்துள்ளார். அப்போது, தனது மாமியார் வீட்டு வாசலில், அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பட்டாசு வெடித்துக் கொண்டும், ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டும் இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காவலர் தமிழரசின் மாமியார் மஞ்சுளா, அந்த இரு நபர்களை அழைத்து, பிறந்த குழந்தை வீட்டில் உள்ளதாகவும், பட்டாசு வெடிக்கும் சத்தத்தால் குழந்தை அழுவதாகத் தெரிவித்ததோடு, அப்பகுதியில் பட்டாசு வெடிக்காமல் இருக்கும் படி கூறி உள்ளார்.

மதுபோதையிலிருந்த நபர்கள், மஞ்சுளா கூறியதைக் கேட்காமல், அவரை ஆபாசமாகத் திட்டியதோடு, கற்களை எடுத்தும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதனை அடுத்து மஞ்சுளாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அவரது மகன் ஹரிஹரன் மற்றும் அவரது மருமகன் தமிழரசன் இருவரும் தடுக்க முயன்றுள்ளனர்.

ஆனால் தடுக்க முயன்றவர்கள் மீதும், மதுபோதையிலிருந்த நபர்கள் கற்களால் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். அதன் பின்னர் காயமடைந்த மூன்று பேரையும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில் திருவிழாவின் போதும், இதே போல் குடித்து விட்டு மஞ்சுளாவின் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து தகராறு செய்ததாகவும், அதை மனதில் வைத்துக் கொண்டு தான் தற்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட இருவரில் பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொரு குற்றவாளியான புருஷோத்தமன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடிபோதையில் தாய், மகள், பக்கத்து வீட்டுக்காரர் மீது கொடூர தாக்குதல்.. திண்டுக்கல்லில் பயங்கரம்!

ABOUT THE AUTHOR

...view details