சென்னை தியாகராயர் நகர் அருகே வசித்துவருபவர் பூபாலன். இவர் வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இந்த நிலையில், நந்தனம் சிஐடி நகரிலிருந்து பூபாலன் தனது காரை மதுபோதையில் ஓட்டி வந்ததாகத் தெரிகிறது. அப்போது வெங்கட் நாராயணன் தெரு வழியாக சிவஞானம் தெருவிற்குள் பூபாலன் நுழைய முற்பட்டபோது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்றுகொண்டிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் மீது மோதியுள்ளது.