சென்னை தி.நகர் அருகே கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் ஹரீஸ், நவீன். இவர்கள் ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து ரயில் மூலம் இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இருவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 256 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
போதை மாத்திரைகள் கடத்திய மாணவர்கள் கைது! - கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இரண்டு கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சென்னை பூக்கடை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், போதை மாத்திரைகளை ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியிலிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும், போதை மாத்திரைகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி வந்தார்களா..? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்..? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.