சென்னை அடையாறு பகுதிக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை மினி சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்வதாக திருவல்லிக்கேணி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் துறையினர் அண்ணா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலாஜா சாலை வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த மினி சரக்கு வாகனத்தை மடக்கி விசாரணை செய்தனர். அதில், வாகனத்தில் இருந்த 20 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.